Loading...

தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்ப் பண்பாடு சார்ந்த உணர்வுகளை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் திசை நோக்கிப் பயணிக்கிறோம் நாங்கள்.

அதில் ஓர் அங்கமாக. ஐரோப்பிய மொழிகளுக்கு இணையாக தமிழ் மொழியினை 30 ஒலிகளின் அடிப்படையில் பயிலும் கலையினைக் கற்றுத்தருகிறோம் அந்தப் பயிலும் கலைக்கு உரிய சான்றிதழ் படிப்பினையும் (Certificate Course ) வழங்குகிறோம். 247 எழுத்துகளின் அடிப்படையில் தமிழ் கற்கும் கடினமான முறையினை முற்றிலும் தவிர்த்துவிட்டு இசை வடிவான நம் தமிழ்மொழியை 12 உயிர் ஒலிகள்,18 மெய் ஒலிகள் என ஒலிகளின் அடிப்படையில் இலக்கண மரபுக்களோடு இச்சான்றிதழ்க் கல்வி கற்றுத்தருகிறது.

இச்சான்றிதழ்க் கல்வியில் 60க்கு மேற்பட்ட பாடங்கள் எனும் கற்றல் படிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன .ஒவ்வொரு பாடத்திற்கு வரையறுக்கப்பட்ட கற்றல் விளைவுகள் (Learning outcomes) உள்ளன.கற்றல் விளைவினைப் பெறுவதற்குச் செயற்பயிற்சிகள், கற்றல் விளைவினைப் புரிந்துகொள்வதற்கு உரிய கற்றல் திறன் மாணவர்களிடம் உள்ளதா ? என்பதைக் கண்டறியும் வகுப்புப் பாடத் தாள்கள், கற்றல் விளைவினை மாணவர்கள்புரிந்துகொண்டதை அளவிடும் தாள்கள் (Assignment sheets), மீள்பார்வை தாள்கள் , தேர்வுகள் தாள்கள் போன்ற பல்வேறு தாள்களும் உள்ளன.

பல்வேறு கற்றல் நுட்பங்களைப் பயன்படுத்தி அந்தக் கற்றல்படிக்கு உரிய கருத்துருக்களை , கற்றல் விளைவுகளை மாணவர்கள் மனதில் நன்கு பதியும்படி விவரிக்க “ஒரு மொழியின் ஓசை” எனும் நூலினையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

மாணவர்கள் இச்சான்றிதழ்க் கல்வியினைப் பெறுவதற்கு நேரடி மற்றும் இணைய வழி வகுப்புகள் நடத்திவருகிறோம்.

இச் சான்றிதழுக்கு உரிய தேர்வினை பன்னாட்டுத் தமிழ்க் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் நடத்தி தேர்வுச் சான்றிதழ்களை வழங்குகிறது.

எட்டு ஒலிக்கட்டமைப்புகளில் (Eight sound structures) உருவாக்கப்பட்டுள்ள சான்றிதழ்க் கல்வியினைப் படித்து முடிக்கும் மாணவர்களால் தொல்காப்பியரின் தமிழ் இலக்கண மரபுகளை எளிதில் புரிந்துகொண்டு தமிழ் மொழியினைப் பிழையின்றி எழுதவும் ,பேசவும் ,படிக்கவும் முடியும்.

இச்சான்றிதழ்க் கல்வியினைப் எவ்வாறு கற்றுக்கொடுக்க வேண்டும்? என்ற பயிற்சியினை .

மேலும் நல்லதொரு வாழ்வியல் முறைக்கு வழிகாட்டும் திருக்குறள் நெறிமுறைகளை எளிய விளங்கங்களுடன் காணொளி வடிவில் வெளியிடுகிறோம்.

தமிழ் இலக்கண மரபுகளை மிகவும் எளிமைப் படுத்தி சொற்களின் இணைப்பில் உள்ள ஓசைநயங்களை காணொளி வடிவில் அறியத்தருகின்றோம்.

சங்கத் தமிழ் இலக்கியப் பாடல்கள் எவ்வாறு எளிமைப்படுத்தி திரையிசையில் ஒலிக்கப்பட்ட என்ற நளினங்களைக் காணொளி வடிவில் வழங்குகிறோம்.