Loading...

புதியவழி தமிழ்க் கல்வி – இயக்ககம் (UK).

வழங்கும்

“ஒலிகளின் அடிப்படையில் தமிழ்மொழி பயிலும் கலை” சான்றிதழ் படிப்பு

A certificate course in “Art of learning Tamil as a sound-based language”.

தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்சி (CBSC), மெட்ரிக்பள்ளி மாணவர்கள், தமிழ்மொழியைக் கற்க விரும்பும் இந்தியாவின் பிற மாநில மாணவர்கள், வெளிநாட்டு மாணவர்கள், மற்றும் தமிழினை ஓர் இசைமொழியாகப் பயில விரும்பும் அனைவருக்கும் உரிய சான்றிதழ்க்கல்வி இது.

247 எழுத்துகளின் அடிப்படையில் தமிழ் கற்கும் கடினமான முறையினை முற்றிலும் தவிர்த்துவிட்டு இசை வடிவான நம் தமிழ்மொழியை 12 உயிர் ஒலிகள்,18 மெய்ஒலிகள் என ஒலிகளின் அடிப்படையில் இலக்கண மரபுக்களோடு கற்றுத்தருகிறது இச்சான்றிதழ்க்கல்வி.

எட்டு ஒலிக்கட்டமைப்புகளில் (Eight sound structures) உருவாக்கப்பட்டுள்ள இச்சான்றிதழ்க் கல்வியினைப் படித்து முடிக்கும் மாணவர்களால் தொல்காப்பியரின் தமிழ் இலக்கண மரபுகளை எளிதில் புரிந்துகொண்டு தமிழ் மொழியினைப் பிழையின்றி எழுதவும் ,பேசவும் ,படிக்கவும் முடியும்.