ஐரோப்பிய மொழிகளுக்கு இணையாக 30 ஒலிகளின் அடிப்படையில் இலக்கண மரபுக்களோடு தமிழ் கற்போம்.
இன்று உலக அரங்கில் சுமார் 4500 மொழிகள் பேசப்படுகின்றன. அவைகள் எழுத்துகளை அடிப்டையாகக் கொண்ட மொழிகள் (Letter - based languages ) , ஒலிகளை அடிப்டையாகக் கொண்ட மொழிகள் (Sound - based languages ) என இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக சீனமொழி, எழுத்துகளை அடிப்டையாகக் கொண்ட ஒரு மொழியாகும்; தமிழ் ஒலிகளை அடிப்டையாகக் கொண்ட ஒரு மொழியாகும் .
எனினும் இன்று தமிழ்மொழி எழுத்துகளை அடிப்டையாகக் கொண்ட ஒரு மொழியாகக் கற்றுக்கொடுக்கப்படுகிறது 30 ஒலிகளை மட்டுமே அடிப்டையாகக் கொண்ட ஒரு மொழியினை இன்று நாம் 247 எழுத்துகளின் அடிப்படையில் கற்றுக்கொடுக்கிறோம். தமிழ்மொழியினை எழுத்துகளின் அடிப்படையில் கற்றுக்கொடுப்பதே ஒரு தவறான அணுகுமுறையாகும். ஒலிகளின் அடிப்படையில்தான் தமிழ்மொழியினைப் கற்றுக்கொடுக்க வேண்டும். ஏனெனில் ஒரு மொழியினை ஒலிப்பதற்கு உருவாக்கப்படும் ஒலிகள் பற்றிய ஆய்வினை ஒலிப்பியல் என்பார்கள். தமிழ் ஒர் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழியாகும்.
அவ்ஒலிப்பொழுக்கத்தை வரையறுத்துச் சொல்கிறது தமிழ் ஒலிப்பியல். அது மட்டுமின்றி ஒலியன்களையும் அடித்தளமாகக் கொண்டது தமிழ் ஒலிப்பியல். தமிழ் மொழியில் பயன்படுத்தப்படும் அடிப்படை ஒலிஅலகுகளைத்தான்( Basic Sound Units) ஒலியன்கள் என்கிறோம். தமிழ்மொழியில் காணப்படும் அனைத்துச் சொற்களையும் ஒலிப்பியல் ஆய்வு செய்து, அவை அனைத்தும் 12 உயிர் ஒலியன்களையும் 18 மெய்ஒலியன்களையும் அடித்தளமாகக் கொண்டு ஒலிப்பதை அறியமுடிகிறது. இந்த 30 ஒலியன்களின் அடிப்படையில்தான் தமிழ்இலக்கணமே கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ் ஒரு இசை சார்ந்த மொழியாகும் “Tamil is a musical language “ 30 ஒலியன்களை அல்லது முதன்மை ஒலிகளை 30 தமிழிசைச்சுரங்கள் (Tamil musical notes) என்பார்கள். தமிழ்மொழியினை ஒலிகளின் அடிப்படையில் ஓர் இசை சார்ந்த மொழியாகப் பயிலும் போதுதான் ,தமிழ்மொழியின் இனிமையையும் , தமிழ் இலக்கண மரபுகளின் ஓசைநயத்தையும் கற்போரால் நன்கு உணரமுடியும். எனவே ஆங்கிலம் , பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய மொழிகளுக்கு இணையாக முப்பதே முதன்மை ஒலிகளையும் (Alphabet sounds) ஒரு சில உயிர்ஒலிக்குறியீடுகளை மட்டுமே பயன்படுத்தி தமிழ்மொழியினை எளிமையாக ,இனிமையாக ,இலக்கணமரபுகளோடு மாணவர்கள் பயில்வதே சிறந்த கற்றல் முறையாகும்.
ஒலிகளின் அடிப்படையில் தமிழ்மொழி கற்கும் முறையினை நீங்கள் அறியவேண்டாமா ? அந்தக் கற்றல் முறை , அதில் உள்ள கற்றல் தொழில்நுட்பம் , பாடத்திட்டம் , அந்தப் பாடத் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க உருவாக்கப்பட்ட " ஒலிகளின் அடிப்படையில் தமிழ் பயிலும் கலை " எனும் சான்றிதழ்க் கல்வி , அந்தச் சான்றிதழ்க் கல்வியினைக் கற்கும் வழிமுறைகள் போன்ற அனைத்தையும் இத்தளத்தில் காணலாம்.
மேலும் நல்லதொரு வாழ்வியல் முறைக்கு வழிகாட்டும் திருக்குறள் நெறிமுறைகளை எளிய விளங்கங்களுடன் காணொளி வடிவில் வெளியிடுகிறோம்.
தமிழ் இலக்கண மரபுகளை மிகவும் எளிமைப் படுத்தி சொற்களின் இணைப்பில் உள்ள ஓசைநயங்களை காணொளி வடிவில் அறியத்தருகின்றோம்.
சங்கத் தமிழ் இலக்கியப் பாடல்களை எளிமைப்படுத்தி , அவை எவ்வாறு திரையிசையில் ஒலிக்கப்பட்டன என்ற நளினங்களைக் காணொளி வடிவில் வழங்குகிறோம்.