Loading...

யாருக்கு உரிய சான்றிதழ் கல்வி இது ?

தமிழ்நாட்டில் தமிழ் மொழியினை ஒரு விருப்ப மொழியாகக் கற்க விரும்பும் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கும் , இசை வடிவான தமிழ் மொழியை வெளி மாநிலங்களில் ,வெளிநாடுகளில் கற்க விரும்பும் மாணவர்களுக்கும் ஏற்ற “ஒலிகளின் அடிப்படையில் தமிழ்மொழி பயிலும் கலை” பற்றிய சான்றிதழ்க் கல்வி இது

பள்ளி,கல்லூரிக் கல்வியினை முடித்த இளையோர் , பெரியோர் இசைவடிவான நம் தமிழ் மொழியினை ஒலிகளின் அடிப்படையில் தொல்காப்பியரின் இலக்கண மரபுக்களோடு கற்க விரும்பினால் ,அவர்களுக்கும் உரிய சான்றிதழ்க் கல்வி இது.

சான்றிதழ் வகுப்புச் சேர்க்கை முறை- பாடத்திட்ட விவரங்கள்.

இணைய வழியில் இச்சான்றிதழ்க் கல்வியினை மாணவர்கள் எங்களிடம் கற்கலாம்.

1) மாணவர்கள் விரும்பினால் தனியாக ஓர் ஆசிரியரிடம் கற்கலாம் . (1:1)

2) ஒரு ஆசிரியர், ஐந்து மாணவர் (1:5) என்று குழுவிலும் கற்கலாம் .

தனிக்கல்வி என்பதால் எப்போது வேண்டுமானாலும் வகுப்பில் சேரலாம்

படிப்புக் காலம் 40 வகுப்புகள் வகுப்பு நேரம் ஒரு வகுப்பிற்கு 60 நிமிடங்கள்
வகுப்பு இடைவெளி வாரம் ஒரு முறை ஒவ்வொரு படத்திற்கு உரிய மாணவர்களின் புரிதலை அளவிடும் தாள்கள் (Assignment sheets) குறித்த ஐயப்பாடுகள் -வாரம் இருமுறை
தனி வகுப்பு : 1:1 ஆசிரியர், மாணவர் விகித அளவில்
குழு வகுப்பு: 4:1 ஆசிரியர், மாணவர் விகித அளவில்
வகுப்பு தொடக்கம் நீங்கள் : விரும்பிய உடனே