இச் சான்றிதழ்க் கல்வியில் பாடங்கள் எனும் கற்றல்படிகள் முற்றிலும் புரியதொரு கற்றல்-கற்பித்தல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கற்றல் படிக்கும் ஒரு கற்றல் விளைவு (Learning outcome) வரையறுக்கப்பட்டுள்ளது. அந்தக் கற்றல் விளைவினைப் பெறுவதற்கு உரிய கற்றல் திறன் மாணவர்களிடம் உள்ளதா ? என்பதைக் கண்டறியும் முறை ; அந்தக் கற்றல்படிக்கு உரிய கருத்துருக்களைக் (Concepts) , கற்றல் விளைவுகளை மாணவர்கள் மனதில் நன்கு பதியும்படி செய்வதற்கு உரிய கற்றல் நுட்பங்கள் (Learning Techniques) ,செயற்பயிற்சிகள் போன்ற விடயங்களைக் காணொளிகள் வடிவில் இங்குக் காணலாம்
ஒவ்வொரு கற்றல்படியினையும் கற்றுக்கொடுக்கும் முன் ஆசிரியர்களும் ,பெற்றோர்களும் அக்கற்றல்படிக்கு உரிய காணொளிகளை காண்பது நன்று.